எழுத்துகள் அழியாது, அழியவிடவும் கூடாது!

காயல்பட்டினம் டாட் காம் இணையதளத்தின் எழுத்து மேடை கட்டுரைகள் நமது ஊரின், சமூகத்தின் நிறை குறைகள் மற்றும் போதாமைகளை சுட்டிக்காட்டி தீர்வுகளை வழங்கி நிற்கக் கூடியவை

அதில் அதிகமாக எழுதியவர்களில் ALS மாமா என்கிற மற்ஹூம் இப்னு அப்பாஸ் அவர்களும் ஒருவர் காயல்பட்டினம் டாட் காம் இணையதளத்தின் செயல்பாடுகள் நின்று விட்டிருந்தாலும் சில நேரங்களில் அதில் வெளியான பழைய கட்டுரைகளை மீண்டும் வாசிப்பது வழக்கம் அதில் எதார்த்தமாக கண்ணில் பட்ட “வாழ்ந்து மறைந்த நம்மவர்கள் தேடிய நூல்களைப் பாதுகாத்து வைப்பது யார் கடமை? சிந்திப்போம் வாரீர்!!” என்கிற ALS மாமாவின் கட்டுரை நமதூர்வாசிகள் எழுதிய பழைய நூல்களை குறிப்பாக வரலாற்று நூல்களை மென் பிரதிகளாக (soft copy) இணையத்தில் பதிவேற்றி பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது

அதன் விளைவாக நமதூர் பற்றி வெளிவந்த நூல்களின் விவரத்தை சேகரித்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் (https://kayalkaaran.blogspot.com/2021/06/blog-post.html) தனிப்பட்ட முறையிலும் வரலாற்று ஆர்வலர்களிடம் நூல்களை வேண்டியதன் விளைவாக நூல்களின் பட்டியலும் அந்த நூல்களின் அசல் பிரதிகளும் கிடைத்தது, தன்னார்வமுடன் முன்வந்து உதவிய சில தோழன்மார்களின் ஒத்துழைப்போடு அவை ஸ்கேன் செய்யப்பட்டு மென் பிரதிகளாக்கப்பட்டது ஒரு சில அரிய நூல்களை ஏற்கனவே ஸ்கேன் செய்து மென் பிரதியாக்கி வைத்திருந்தவர்களும் தந்துதவினர்

இருந்தாலும் ”வான்புகழ் காயல்பட்டணம்” என்கிற நமதூர் பற்றிய சரித்திர நூல் ஒன்று மட்டும் கிடைக்காததால் சேகரிக்கப்பட்ட மென் பிரதிகளை பதிவேற்றி வெளியிடுவதில் ஏறத்தாழ இரு வருடங்கள் தாமதம் ஆகிப் போய்விட்டது

மென் பிரதி ஆக்கப்பட்ட நூல்களை இதற்கு மேலும் வெளியிடாமல் வைத்திருக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் இப்போது பதிவேற்றப்பட்டுள்ளது

மேற்கண்ட “வான்புகழ் காயல்பட்டணம்” எனும் நூலின் அசல் பிரதியோ அல்லது மென்பிரதியோ யாரிடமாவது இருக்கும் பட்சத்தில் அவற்றை தந்து உதவினால் அது நமது ஊர் பற்றி ஆய்வு செய்பவர்களுக்கு பயன்படுவதுடன் அந்த நூல் மறைந்து போய்விடாமலும் பாதுகாக்கப்படும்

“எழுதியவன் மறைந்தாலும் அவன் எழுத்துக்கள் மறைவதில்லை” என்பது மெய்ப்பிக்கப்பட்டுள்ளது மற்ஹூம் ALS மாமாவின் எழுத்துகள் இன்றும் உலகில் ஜீவிக்கவே செய்கிறது

அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொள்வானாக

காயல்பட்டினத்தின் வரலாறு பற்றி வெளிவந்த நூல்கள்:

1.
நூலின் பெயர்: காயல்பட்டணம் காரண சரித்திரம் (அர்வி/அறபுத்தமிழ்)
நூலாசிரியர்: பாளையம் முஹம்மது அபூபக்று முஹ்யித்தீன் அப்துல்லாஹ் லெப்பை ஆலிம்


2.
நூலின் பெயர்: வான்புகழ் காயல்பட்டணம்
நூலாசிரியர்: ஹாபிஸ் MK செய்யத் அஹ்மத்
இந்த நூலின் பிரதி கிடைக்கவில்லை 

3.
நூலின் பெயர்: காயல்பட்டினம்
நூலாசிரியர்: முனைவர் ஆர். எஸ். அப்துல் லத்தீபு M.A.,


4.
நூலின் பெயர்: காயல்பட்டினத்தின் வரலாற்றுச் சுருக்கமும் தலைமுறையும்
நூலாசிரியர்: முனைவர் ஆர். எஸ். அப்துல் லத்தீபு M.A.,


5.
நூலின் பெயர்: காயலின் இறைநேசச் செல்வர்கள்
நூலாசிரியர்: முனைவர் ஆர். எஸ். அப்துல் லத்தீபு M.A.,


6.
நூலின் பெயர்: காயல்பட்டணம் தேர்வு நிலை பேரூராட்சி நூற்றாண்டு நிறைவு சிறப்பு மலர் - 1990
நூலாசிரியர் : காயல் மகபூப்


7.
நூலின் பெயர்: வரலாற்றில் இலங்கையும் காயல்பட்டினமும்
நூலாசிரியர்: மானா மக்கீன்
நன்றி: நூலகம் 


8.
“The Concise History Of Kayalpatnam” மற்றும்
9.“காயல்பட்டினம்தான் காயல்” ஆகிய RS அப்துல் லத்தீப் ஹாஜி எழுதிய நூல்களின் பிரதிகள் விற்பனையில் இருப்பதால் அவற்றின் மென் பிரதிகள் இங்கு பதிவேற்றப்படவில்லை

மேற்கண்ட நூலை பஸீஹா ஸ்டார், (நெய்னார் தெரு, காயல்பட்டினம்) இலும் Common Folks நூல் விற்பனை இணையதளத்திலும் பெறலாம்.

காயல்காரன்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Kayal Heritage Walk Dec - 2020

காயல்பட்டின உறவுமுறை சொற்கள்