Kayal Heritage Walk Dec - 2020
பதிகை இணைப்பு முகப்பிலுள்ளது
காயல் பாரம்பரிய நடை 002
கரு:
பிரதான பஜாரின் வணிக வரலாறு
தலைமை:
சாளை. பஷீர் ஆரிஃப், எழுத்தாளர்
நாள் & நேரம்:
5 டிசம்பர் 2020 (சனி)
3:30-4:30 பி.ப வரை
துவங்குமிடம்:
மஸ்ஜித் - ஆறாம் பள்ளி
ஒருங்கிணைப்பு:
காயல்காரன் பக்கம்
டிசம்பர் 5 சனிக்கிழமை மாலை 3:30 முதல் 5 :00 மணிவரை காயல்பட்டினம் பிரதான பஜாரில் காயல் பண்பாட்டுக் குழு மற்றும் காயல்காரன் சமூக ஊடக பக்கத்தின் ஒருங்கிணைப்பில் காயலின் வணிக வரலாறு எனும் தலைப்பில் பாரம்பரிய நடை (Heritage Walk) நிகழ்வு நடத்தப்பட்டது
ஆறாம் பள்ளியில் துவங்கி ஸூயஸ் கார்னர் (ஐ.சி.ஐ.சிஐ. வங்கி) வரை பஜாரின் பழைய அமைப்பு கட்டடங்கள் மற்றும் அவற்றில் செயல்பட்டு வந்த உள்ளூர் வணிக நிறுவனங்கள் பற்றியம் புன்னைக்காயல், பழையகாயல் காயல்பட்டினம் பகுதிகளை உள்ளடக்கிய பாண்டியர்களின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக திகழ்ந்த காயல் துறைமுகத்தில் நடைபெற்ற முத்து குளிப்பு கடல் மார்க்கமாக செய்யப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி மற்றும் போர்த்துகீசிய சீன மற்றும் அரேபிய வணிகர்கள் உடனான வணிகத் தொடர்புகள் அதனால் உண்டான கலாச்சார பரிமாற்றங்கள் காயல்பட்டினம் வாசிகள் கல்கத்தா, ஆந்திர பிரதேசம் போன்ற பகுதிகளில் பாரம்பரியமாக செய்துவரும் துணி, தோல் மற்றும் இரும்பு வியாபாரம் இலங்கையுடனான வணிகத் தொடர்பு உள்ளூரில் நடைபெற்ற தொழில்கள் பிரதான பஜாரில் பழைய அமைப்பு ஆகியவை விளக்கப்பட்டது எழுத்தாளர் சாளை பஷீர் வரலாற்றுத் தகவல்களை விளக்கிப் பேசினார் காயல் பண்பாட்டுக் குழுவின் உறுப்பினர்கள், வரலாற்று ஆர்வலர் அபூ உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
#kayalpatnam #kayalpattinam #kayalheritage #kayalheritagewalk #kayalkaaran
Comments
Post a Comment