இடுகைகள்

எழுத்துகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காயல்பட்டின உறவுமுறை சொற்கள்

படம்
உறவுமுறை சொற்கள் சமூக வாழ்வில் இருவருக்கு இடையிலான நெருக்கத்தையும் உரிமையையும் வெளிப்படுத்தக் கூடியவை, வட்டார மற்றும் சாதி அடிப்படையில் உறவுமுறை சொற்களில் வேறுபாட்டை காணலாம் அவை பற்றி பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன தமிழக முஸ்லிம்களின் உறவுமுறை சொற்களை பற்றிய தகவலை தேடினால், உம்மா என்பது தமிழ் சொல்லா அறபு சொல்லா?, வாப்பா என்பது எந்த மொழிச் சொல்? என்பது போன்ற விவாதத்தை தான் காண முடியும், கூடுதலாக எந்த தகவலையும் பெற இயலாது தமிழக முஸ்லிம்களின் உறவுமுறை சொற்களை உள் மாவட்ட முஸ்லிம் உறவுமுறை சொற்கள், கடலோர மாவட்ட முஸ்லிம் உறவுமுறை சொற்கள், உருது பேசுபவர்களின் உறவுமுறை சொற்கள் என்று பிரதானமாக மூன்றாக பிரிக்கலாம் உள் மாவட்ட முஸ்லிம்களின் உறவுமுறை சொற்கள் பெரும்பாலும் கேட்டவுடனேயே தமிழ்ச்சொல் என்பது போல தோன்றக்கூடியது, உருது பேசுபவர்களின் உறவுமுறை சொற்கள் தமிழ் திரிபுவுடன் கூடிய உருது சொல்லாக இருப்பதை உணரலாம் ஆனால், கடலோர மாவட்ட முஸ்லிம்களின் உறவுமுறை சொற்கள் இதிலிருந்து வேறுபட்டு தோற்றம் அளிக்கும் தமிழகத்தின் பழவேற்காடு துவங்கி கடலோரமாக கேரளம் வரையிலும் இலங்கை தீவிலும் வசிக்கின்ற ...

ஆண் பெண் கலப்பு - தீர்வை நோக்கி நகர்வோம்..

படம்
கடந்த வெள்ளிக்கிழமை(12.2.2021) தொடங்கி 3 தினங்களாக நமதூர் ஐக்கிய விளையாட்டு சங்க (USC)மைதானத்தில் ஆண்,பெண் கலப்பு முறையில் வர்த்தக கண்காட்சி🎪 ஒன்று நடைபெற்றது. இதை பற்றி பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர். சிலர் இது போன்ற நிகழ்வுகளை தனித்தனி நேரங்கள் என வைக்கலாம் என்றும் தனித்தனி நாட்கள் வைக்கலாம் என்றும் பதிவிட்டிருந்தனர் ஒரு கடைக்கு ஒருபுறம் ஆண்கள் பகுதி மறுபுறம் பெண்கள் பகுதி என்று ஒதுக்குவதன் மூலம் கால விரயத்தை தவிர்க்கலாம் ஆனால் முடிவு செய்ய வேண்டியது ஏற்பாட்டாளர்கள் தான் பல தரப்பிலிருந்தும் வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பின்னர் அந்த கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் இறுதி நாளில் ஆண்கள் & பெண்களுக்கு தனி ⌚நேர ஒதுக்கீடு செய்தனர். சரி, ஆண் பெண் கலப்பு பிரச்சனை இந்தக் கண்காட்சியில் மட்டும் தான் நடைபெறுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை. ஆண், பெண் கலப்பு (சில)கந்தூரிகளிலும் பெருநாட்களில் கடற்கரையிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது (இனிமேலாவது இது தொடராமல் இருக்க வேண்டும்)  இதற்கு என்ன தான் தீர்வு ⁉️ முன்பு இருந்ததை விட தற்போது பெண்கள் தங்கள் தேவைகளுக்காக வெளியில்...