காயல்காரன் - அறிமுகம்
நோக்கம் :
காயல்காரன் என்பது தொன்மை மிகுந்த காயல்பட்டினத்தின் வரலாறு மற்றும் வாழ்வியலை இணையத்தில் காட்சிப் படுத்துவதற்கானதோர் பிரத்தியேக தளமாகும்.
பயணம் :
முதலில் Facebook -ல் துவங்கப்பட்டாலும் Facebook பக்கத்தை கையாள்வதில் இருந்த சில சிக்கல்கள் காரணமாகவும் போதிய ஆதரவின்மையாலும் அது கைவிடப்பட்டது பின்பு 09- 12- 2016 - இல் Instagram பக்கம் துவங்கப்பட்டது Instagram -இல் நமது ஊரை சார்ந்து இயங்கும் ஏனைய பக்கங்களின் தயவாலும் இறை உதவியாலும் இப்பக்கம் வளர்ச்சி கண்டது,
ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி..!! ஜஸாகல்லாஹு ஹைரன்..
ஆரம்பத்தில் வரலாற்றுத் தகவல்கள் மாத்திரமே பதியப்பட்டு வந்தாலும் பின்பு காயலின் பேச்சுவழக்கு (காயல் வழக்கு தமிழ், காயல் நிகண்டு) தொடர் இடுகைகள், ஊரில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள், சமூக சார்ந்த விமர்சனங்கள் (வியாக்கியானம்) மற்றும் காயலின் நினைவுகளுக்கு புத்துணர்வூட்டும் காயலின் வாழ்வியலை பிரதிபலிக்கக் கூடிய தத்ரூபமான புகைப்படங்கள் போன்றவையும் பதியப்படுகிறது.
Facebook Instagram Twitter ஆகிய சமூக ஊடகங்களில் நம் பக்கங்கள் உள்ளன
வலைப்பூ (Blog) ஏன்..?
நமது ஊரின் வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டி இணையத்தில் தேடிய போது பெருமளவு தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை வரலாற்று நூல்களும் ஒன்றிரண்டே கிட்டியது எனவே, நமது ஊர் பற்றி வெளிவந்த வரலாற்று புத்தகங்கள், அரபுத் தமிழ் நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை வளரும் தலைமுறையினருக்கு சென்று சேரும் வகையில் இணையத்தில் பதிவேற்றுவதற்காகவே இந்த வலைப்பூ (Blog) துவங்கப்பட்டுள்ளது.
வேண்டுகோள் :
தங்களிடத்தில் நமது ஊரின் பழங்கால புகைப்படங்கள், அரபுத் தமிழ் மற்றும் வரலாற்று நூல்கள் ஏதேனும் இருப்பின் மின்நூல்களாக (e-book) காப்பெயடித்து இணையத்தில் பதிவேற்றுவதற்காக தந்து உதவ வேண்டுகிறோம்.
இங்ஙனம் :
செ.மு.அனீஸ் அஹ்மத்
தொடர்புக்கு :
E-mail : ikayalkaaran@gmail.com
Facebook : www.facebook.com/kayalkaaran/
Instagram : www.instagram.com/kayalkaaran/
Comments
Post a Comment