ஆண் பெண் கலப்பு - தீர்வை நோக்கி நகர்வோம்..

கடந்த வெள்ளிக்கிழமை(12.2.2021) தொடங்கி 3 தினங்களாக நமதூர் ஐக்கிய விளையாட்டு சங்க (USC)மைதானத்தில்

ஆண்,பெண் கலப்பு முறையில் வர்த்தக கண்காட்சி🎪 ஒன்று நடைபெற்றது.

இதை பற்றி பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.

சிலர் இது போன்ற நிகழ்வுகளை தனித்தனி நேரங்கள் என வைக்கலாம் என்றும்
தனித்தனி நாட்கள் வைக்கலாம் என்றும் பதிவிட்டிருந்தனர்

ஒரு கடைக்கு ஒருபுறம் ஆண்கள் பகுதி மறுபுறம் பெண்கள் பகுதி என்று ஒதுக்குவதன் மூலம் கால விரயத்தை தவிர்க்கலாம்

ஆனால் முடிவு செய்ய வேண்டியது ஏற்பாட்டாளர்கள் தான்

பல தரப்பிலிருந்தும் வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு பின்னர் அந்த கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் இறுதி நாளில் ஆண்கள் & பெண்களுக்கு தனி ⌚நேர ஒதுக்கீடு செய்தனர்.

சரி, ஆண் பெண் கலப்பு பிரச்சனை இந்தக் கண்காட்சியில் மட்டும் தான் நடைபெறுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை.

ஆண், பெண் கலப்பு (சில)கந்தூரிகளிலும் பெருநாட்களில் கடற்கரையிலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது

(இனிமேலாவது இது தொடராமல் இருக்க வேண்டும்) 

இதற்கு என்ன தான் தீர்வு ⁉️

முன்பு இருந்ததை விட தற்போது பெண்கள் தங்கள் தேவைகளுக்காக வெளியில் செல்லும் சூழல் அதிகரித்துள்ளது

ஆண்,பெண் கலப்பு ஏற்படும் எனவே பெண்கள் வெளியிலேயே செல்லக்கூடாது என்றா கூறப் போகிறோம் ?

பெண்கள் தங்கள் தேவைகளுக்காக வெளியில் செல்வது இயல்பான ஒன்று ஆனாலும் முன்பெல்லாம் ஆண்,பெண் கலப்பு இந்த அளவு ஏற்படவில்லை

காரணம் எல்லா இடங்களிலும் பெண்களுக்கான பிரத்தியேக ஏற்பாடுகள் முழுமையாக நடைமுறையில் இருந்தது

பெண்களுக்கான பாதைகள் முடுக்கு என்றும்

கடைகளில் தொண்டு வாசல் என்றும்

அன்றாடம் 🛍️பொருட்கள் வாங்க கொல்லைக் கடைகள் என்றும் செயல்பட்டு வந்தது

பெருநாள் வெட்டை எனும் பெயரில் பெருநாட்களில் அந்தந்த பகுதிகளில் உள்ள வெட்டைகளில் பெண்கள் கூடுவார்கள்.

 இவைகளின் மூலம், ஆண்,பெண் கலப்பு என்பது நமதூரில் பெருமளவு தவிர்க்கப்பட்டது

தற்போது முடுக்கு & தொண்டு வாசல் ஆகியவை மட்டுமே பெயரளவில் நடைமுறையில் உள்ளது

அதுபோன்ற பிரத்தியேக ஏற்பாடுகளை கைவிட்டதன் விளைவு மார்க்க வரம்புகளை பேணாமல்

கடைகளிலும் பெருநாட்களின் போது கடற்கரையிலும் ஆண்களும் பெண்களும் மார்க்க வரம்புகளை மீறி சர்வ சாதாரணமாக உலாவுவதை காண முடிகிறது

இது ஒழுக்க கேடான மற்றும் விரும்பத்தகாத பல சம்பவங்களுக்கு வழிவகுக்கிறது

எனவே, பெருநாள் வெட்டை, கொல்லைக் கடை, தொண்டு வாசல் போன்ற பெண்களுக்கான தனி ஏற்பாடுகளை தற்கால சூழலுக்கு ஏற்ப முழுமையாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்

அதிலும் குறிப்பாக பெருநாட்களில் வெட்டை / மைதானங்களில் பெண்களுக்கு மாற்று பொழுதுபோக்கு வழிகளை ஏற்படுத்துவது கடற்கரையில் ஏற்படும் ஆண்,பெண் கலப்பை தவிர்ப்பதற்கு சிறந்த வழியாகும்.

ஆண்,பெண் கலப்பு பற்றிய கருத்துப் பரிமாற்றத்தை வெறும் பேச்சோடு முடித்துக் கொள்ளாமல்..

ஐக்கிய பேரவை மூலமாகவோ அல்லது அந்தந்த ஜமாஅத்களின் மூலமாகவோ இவற்றை தற்கால சூழலுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்தி

ஆண்,பெண் கலப்பால் ஏற்படும் சமூகத்தீங்கை விட்டும் தவிர்ந்து கொள்வோம்.
இன் ஷா அல்லாஹ்

இனிமேலும் இவற்றில் கவனம் செலுத்தாவிட்டால் வரும் காலங்களில் சூழல் இன்னும் மோசமாகக் கூடும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மையும் நம் மக்களையும் மார்க்க நெறிகளை பேணி நடப்பவர்களாக ஆக்கி அருள்வானாக.

 📱 காயல்காரன் •15.02.2021

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எழுத்துகள் அழியாது, அழியவிடவும் கூடாது!

Kayal Heritage Walk Dec - 2020

காயல்பட்டின உறவுமுறை சொற்கள்