இடுகைகள்

மரபு நடை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காயல்பட்டினிகளின் பட்கல் பயணம்

படம்
பட்கல், இந்தியாவின் மேற்குக் கரையோரம் உத்தர கர்நாடகத்தில் அமைந்துள்ள நகரம் ஓரிருமுறை மறைந்த காயல் வரலாற்றாசிரியர் அப்துல் லத்தீப் ஹாஜியார் "பட்கல் அப்படியே நம்ம ஊரு மாதிரி தான் இருக்கும்" என்று கூறியிருக்கிறார். எகிப்திலிருந்து புறப்பட்டு காயல் வந்த கப்பலோடு 4 கப்பல்கள் புறப்பட்டதாகவும் அதில் ஒன்றில் பயணித்தவர்கள் பட்கலில் கரை ஒதுங்கிய தாகவும் ஒரு செவிவழிச் செய்தி உண்டு. மேற்கொண்டு பட்கல் பற்றி எதையும் அறிந்திருக்கவில்லை. கொரோனா முதல் அலை ஓய்ந்த சமயத்தில் காயல் பாரம்பரிய நடைக்காக பஷீராக்காவிடம் (சாளை பஷீர்) அறிமுகமாகி பின்னர் காயல்பதி குழும செயல்பாடுகளின் மூலம் நெருக்கம் உண்டானது. சென்னையில் இருக்கும் பொழுது தொண்டியார் பேட்டை ஸூபி ஞானி. குணங்குடி மஸ்தான் ஸாஹிப் நினைவிடம், திருவல்லிக்கேணி முஹம்மடன் லைப்பரேரி, அறபு குடியேற்ற பகுதிகளில் ஒன்றான பழவேற்காடு என அருகிலிருக்கும் சிறிய இடங்களுக்கு அழைத்துக் கொண்டிருந்தவர் திடீரென பட்கல் பயணத்திட்டத்தை முன்வைத்தார். தோழமார்களோடு ஊட்டி முதல் உம்றா வரை வாய் வழியாகவே பயணித்து பழக்கப்பட்ட நான் அதே நினைப்பில் பட்கல் பயணத்துக்கும...

Kayal Heritage Walk Dec - 2020

படம்
பதிகை இணைப்பு முகப்பிலுள்ளது காயல் பாரம்பரிய நடை 002  கரு: பிரதான பஜாரின் வணிக வரலாறு தலைமை: சாளை. பஷீர் ஆரிஃப், எழுத்தாளர் நாள் & நேரம்: 5 டிசம்பர் 2020 (சனி) 3:30-4:30 பி.ப வரை துவங்குமிடம்: மஸ்ஜித் - ஆறாம் பள்ளி ஒருங்கிணைப்பு: காயல்காரன் பக்கம் டிசம்பர் 5 சனிக்கிழமை மாலை 3:30 முதல் 5 :00 மணிவரை காயல்பட்டினம் பிரதான பஜாரில் காயல் பண்பாட்டுக் குழு மற்றும் காயல்காரன் சமூக ஊடக பக்கத்தின் ஒருங்கிணைப்பில் காயலின் வணிக வரலாறு எனும் தலைப்பில் பாரம்பரிய நடை (Heritage Walk) நிகழ்வு நடத்தப்பட்டது ஆறாம் பள்ளியில் துவங்கி ஸூயஸ் கார்னர்  (ஐ.சி.ஐ.சிஐ. வங்கி) வரை பஜாரின் பழைய அமைப்பு கட்டடங்கள் மற்றும் அவற்றில் செயல்பட்டு வந்த உள்ளூர் வணிக நிறுவனங்கள் பற்றியம் புன்னைக்காயல், பழையகாயல் காயல்பட்டினம் பகுதிகளை உள்ளடக்கிய பாண்டியர்களின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாக திகழ்ந்த காயல் துறைமுகத்தில் நடைபெற்ற முத்து குளிப்பு கடல் மார்க்கமாக செய்யப்பட்ட ஏற்றுமதி இறக்குமதி மற்றும் போர்த்துகீ...

Kayal Heritage Walk Dec - 2019

படம்
Kayal Heritage Walk    (பாரம்பரிய நடை) காயல் வரலாற்றின் மையப் புள்ளியான குத்பா பெரிய பள்ளி யின் ஆயிரமாண்டு கால வரலாற்றினை அறிந்திட இணைந்து உலாவுவோம் பாரம்பரிய நடை (Heritage Walk) வாயிலாக சரித்திரம் அறிவோம்..  கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழுள்ள இணைப்பில் மூலம் உங்கள் வருகையினை உறுதிப்படுத்துங்கள். https://forms.gle/uAqN5y1ERKBZsi5F9 நன்றி.