கவிஞர் காயல் இப்னு செய்குனா மறைவு
தமிழாசிரியரும் சிறந்த வரலாற்று ஆய்வாளருமான "காயல் இப்னு செய்குனா எ. பேராசிரியர். அபுல் பரகாத் அவர்கள்" நேற்றிரவு (14.5.2021) வபாத் ஆகிவிட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலய்ஹி றாஜிஊன்
நாம் பல வரலாற்று ஆர்வலர்களையும் வரலாற்று ஆய்வாளர்களும் கண்டிருக்கலாம்
ஆனால், அரிதிலும் அரிதான அல்லது பலருக்கும் விடை தெரியாத வரலாற்றுத் தகவல்களை மாத்திரமே அதிகம் தெரிந்த ஒருவர்
அதுவும் பிரபலமாக அறியப்படாத ஒருவர் இருந்தால் அது நிச்சயம் அபுல் பரகத் சாராக தான் இருந்திருப்பார்
வரலாற்றை கூறப்படும் போக்கில் இல்லாமல் ஆய்வு நோக்கில் காண்பவர்
அவருடைய முகநூல் பக்கத்தை ஒரு வரலாற்றுப் பெட்டகம் என்றுதான் கூற வேண்டும்
இப்போது முகநூலை திறந்த போதும் நேற்று ஒருவருடைய கமெண்டில் அவர் இட்ட விளக்கப்பதிவு வந்து நிற்கிறது
நேற்று இருந்தவர் இன்று இல்லை
ஆனால் துரதிருஷ்டம் நாம் அவருக்கு உரிய அங்கீகாரத்தை கொடுக்காமலேயே விட்டு விட்டோம்
வல்ல நாயன் அல்லாஹ் அன்னாருடைய பிழைகளைப் பொறுத்து உரிய கூலியை கொடுப்பானாக
காயல்காரன்
#Kayalkaaran #Kayalpattinam #kayalpatnam
கருத்துகள்
கருத்துரையிடுக