எழுத்துகள் அழியாது, அழியவிடவும் கூடாது!

காயல்பட்டினம் டாட் காம் இணையதளத்தின் எழுத்து மேடை கட்டுரைகள் நமது ஊரின், சமூகத்தின் நிறை குறைகள் மற்றும் போதாமைகளை சுட்டிக்காட்டி தீர்வுகளை வழங்கி நிற்கக் கூடியவை அதில் அதிகமாக எழுதியவர்களில் ALS மாமா என்கிற மற்ஹூம் இப்னு அப்பாஸ் அவர்களும் ஒருவர் காயல்பட்டினம் டாட் காம் இணையதளத்தின் செயல்பாடுகள் நின்று விட்டிருந்தாலும் சில நேரங்களில் அதில் வெளியான பழைய கட்டுரைகளை மீண்டும் வாசிப்பது வழக்கம் அதில் எதார்த்தமாக கண்ணில் பட்ட “ வாழ்ந்து மறைந்த நம்மவர்கள் தேடிய நூல்களைப் பாதுகாத்து வைப்பது யார் கடமை? சிந்திப்போம் வாரீர் !!” என்கிற ALS மாமாவின் கட்டுரை நமதூர்வாசிகள் எழுதிய பழைய நூல்களை குறிப்பாக வரலாற்று நூல்களை மென் பிரதிகளாக (soft copy) இணையத்தில் பதிவேற்றி பாதுகாத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது அதன் விளைவாக நமதூர் பற்றி வெளிவந்த நூல்களின் விவரத்தை சேகரித்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் (https://kayalkaaran.blogspot.com/2021/06/blog-post.html) தனிப்பட்ட முறையிலும் வரலாற்று ஆர்வலர்களிடம் நூல்களை வேண்டியதன் விளைவாக நூல்களின் பட்டியலும் அந்த நூல்களின் அசல் பிரதிகளும் க...